நினைவுகள், நீங்காது நெஞ்சில்
- மழைக்காதலன்
- Dec 6, 2023
- 1 min read

நினைவுகள், நீங்காது நெஞ்சில்
கனவுகள் கண்ணீரில் கரையாது கொஞ்சம்
வலி தேக்கி விம்ம, ஏதோ தேடல்
அன்பின் ஆழியில் துவக்கமாய் வந்தாய் நீ
ஆழத்தில், நான் தொலைத்த சுவாசமாய் நீ
கரை தாண்டி கானலாய் மாற, காலத்தின் கல்லறையில்
நிஜங்களை புதைத்து, புன்னகை மலர் சூடினேன்
பளிங்கில் பணிந்தாலும் கல்லறையில் கல்தானடி
வண்ண மலர்கூட்டமும் வளையம் தானடி
சிப்பிக்குள் தொலைந்த கடலோசை நான்
காதோரம் கதைபேசி காற்றோடு கரைவேன் .
ஓடும் நதியின் ஒளங்களில் உன்பாதம்
சிணுங்கும் சலங்கை அலைத்துளிகளானேன்
நீ நடக்க கல்தேக கால் பதிவானேன்
இன்று உன் நாட்களின் ஓட்டத்தில் ஒரு நொடியாயினும்
தோன்றா ஒர்மைகளின் துளி சிதறலாய்
பேசும் ஆயிரம் வார்த்தைகளில் ஒற்றையாய்
இருப்பேனென்று சிந்தனை சிதல்களில் சருகாகிறென்.

Comments