மாற்றப்பட வேண்டிய கலாச்சாரங்கள்
- மழைக்காதலன்
- May 17, 2023
- 1 min read

எனகென்னவோ மதமும் கடவுளும்
தேவையற்ற
அலங்காரங்களே
தன் வசதிகேன்று
ஒரு கடவுள்...
ஒரு கதை...
ஆயிரம் ஆண்டாய்
தலையில் தூக்கி
ஒரு கூட்டம்…
நம்பிக்கை பொய்யென்று சொல்லவில்லை... உங்கள் மதத்தை கடவுளை நம்பவில்லை என்பது அவமதிப்பல்ல. நம்ப வேண்டும் வழிபட வேண்டும் என்பது தனிமனித உரிமை.
முண்டாசில் இருந்து ஜீன்ஸ்கு,
மன்னராட்சியில் இருந்து ஜனநாயகதுக்கு
பால்ய கல்யாணம் தவறென்று உணர்ந்தோம்,
பெண்ணும் சமமென்று உரைத்தோம்
பண்டைய கால கலாச்சாரங்கள்.
மாற்றப்பட வேண்டிய கலாச்சாரங்கள்..
இந்த மத வெறி போதனைகள் போல...

07-05-2023
Comments