top of page

புது நாள்

  • Writer: மழைக்காதலன்
    மழைக்காதலன்
  • Jun 8, 2023
  • 1 min read

ree

வாழ்வில் தடுமாறிய

தடம் தேடிய நாட்கள்

கதிரவன் மலைதேடும் நேரம்

தேடிக்கடந்த தருணங்கள்…


இரவின் மடியில்

மனதின் பாரம் அழுத்த,

மூடிய கண்களின்

இமைவாதலினூடே

வழிந்தோடும் கண்ணீர்…


வழிந்த கண்ணீர், வறண்டதில்லை

தேடிய தடம் தீண்டியவரை.


வனங்களினூடே,

அமைதியின் கரைச்சலில்,

பசுமையின் மெத்தையில்

பூக்களின் பறவையின்,

இலைதிண்ணும் இரைதிண்ணும் உயிரினில்

உலகம் கண்டதும்

கதிரவன் மறைதல்

காதல் தருணங்களாய்

மாறின நாட்கள்…


இரவின் கருமை விடுத்து,

மேகத்தில் சாந்தும் சந்தனமும் பூசி,

மலை முகட்டில் சூரியன்

முட்டி சிலிர்க்கும்

ஒவ்வொரு காலையும்

புதிதென மாறின வாழ்க்கை…


வேண்டின வரம்

கிடைப்பதில்லை, நீ

அமைத்திடல் வேண்டுமென

உணர்த்தின நாட்கள்…


தடைகளும் தோல்விகளும்

உறக்கத்தின் அமைதியில்

படிகளும் பாடங்களுமாகுமென

பழக்கிய இரவுகள்…


மெருகேற்றிய நாட்களும்,

திடம் கூட்டிய இரவுகளும்…

வாழ்க்கையை மெல்ல செதுக்க,

நாளைய கதையெழுத

சோம்பல் முறித்து

பிறந்ததொரு புது நாள்…



ree


Comments


bottom of page