சொப்பனங்கள்
- மழைக்காதலன்
- May 30, 2023
- 1 min read

நேற்றைய சொப்பனங்கள்
இன்றைக்கு வெறும்
நினைவுகளாய்!
மாற்றங்கள் பல,
எண்ணங்களில்;
செயல்களில்;
வெறுமனே ஒளிரும் வெளித்தோற்றங்களில்...
நேற்றைய சொப்பனங்களை
மறந்து
நாளைய சொப்பனங்களை நோக்கி
நம்மை மாற்றி,
நம்மை மெருகேற்றி
நாளையும் வாழ்வோம்
என்ற நம்பிக்கையில்...

Comments