காழ்ச்சையே
- மழைக்காதலன்
- May 25, 2023
- 1 min read

அந்திபோழுதினில் திங்கள் மறைய
இருள் சூழுதல் கண்டு கரைந்தரும் உளரே
மாயும் காலம் செவ்வானம் ரசித்தவரும் உளரே.
ஒற்றை நாள் வாழும் மலரினை
சில நாள் வாழதா என ஏங்கினரும் உளரே
காதலுக்கும் கடவுளுக்கும் கொடுத்து மகிழ்ந்தோரும் உளரே.
கொட்டும் மழை தனில், காலை பனிதனில்
கொஞ்சி விளையாடி களிப்பவரும் உளரே
மஞ்சில் தஞ்சம் கொள்வரும் உளரே.
வாழ்வின் தோல்விகளில், சோதனைகளில்
இயலாதென்று சோர்ந்தவரும் உளரே
இதுவொரு வாய்ப்பென காட்டினரும் உளரே.
விழிகள் காண்பது வெறும் காழ்ச்சையே,
அதன் பொருள்தனை புத்தியில்சேர்த்தல் மனமன்றோ?
நின் மனக்கண் தெளிவில்லையேல்,
காண்பதெல்லாம் வெறும் பொருளற்ற காழ்ச்சையே...

Comments