வண்ணத்துபூச்சியாய் நீ...
- மழைக்காதலன்
- May 21, 2023
- 1 min read

புறமே பொன் திளங்கும் பொய் வேஷம் பூசி
அகத்தே ஆந்தைபோல்,
கன்னியின் கூந்தல் கருமை தோற்கும் இருளில்
சிக்கும் இரைதன்னை காத்திருக்கும்
மனித மிருகங்களினுடே,
மின்னும் நிறங்கள் தூவிய
மென் சிறகு விரித்து, எண்ணத்தில் புதுவாழ்வு
கினாகண்டு சிறகடிக்கும் வண்ணத்துபூச்சியாய் நீ...

Comments