மரணம்
- மழைக்காதலன்

- May 6, 2023
- 1 min read

அதோ மரணம் என்னைத் தேடி என்னை விட வேகமாக!!
பிறந்ததும் தொடங்கியது இந்த விரட்டல்!!! ஆண்டுகள் பல கடந்தும் தொடர்கிறது!!!
மரணமே நின்முகம் அழகா? கோரமா?
அன்றொருவன் மொழிந்தான் மரணம், நாம் பகிறும் ஒற்றை இலக்கு!!! அழகு!!!
ஒவ்வொருநிமிடமும் உனை பயக்கிறது மானிடக்கூட்டம்!!! கோரம்!!!
சத்தியவான்களின் உயிர்நீக்கி உடலை எரிப்பதா? புதைப்பதா? வாதாடும் சவித்திரிகளுக்கு, நீ அழகுதான்!!!
கன்றுகளை கொல்வதற்கே தேர்பூட்டி நகர்வலம்போகும் இன்றைய அரசர்களுக்கு நீ அழகுதான்!!
அதுசரி அழகென்றால் நீ பெண்ணோ? இல்லை ஆணோ?
உடல் தள்ளி உயிர் மட்டும் கொள்ளைகொள்ளும், நீ பெண்ணோ?
நீ வந்ததும் மலர்கள் கொண்டு சேர்க்கிறார்களே, நீ பெண்ணோ??
பெண்ணென்றால் உன்னிடம் ஒரு கேள்வி!!
உன் எடை என்ன??
நீ வருவதை யாரும் உணர்வதே இல்லையே!! காற்றினும் மென்மையோ நீ?
உன்னைக் கண்டதாய் எவரும் சாட்சிசொன்னதில்லையே தூசினும் இளைத்ததோ நீ?
நீ மென்மையெனில் நின் உடை என்ன?
உடையென்ன துக்கமோ? உயிரினை தழுவ உன் உடையை களைந்துவிட்டு செல்கிறாய்!!
இல்லை மகிழ்ச்சியோ? ஒவ்வொரு முறை வரும்போதும் அதைத்தானே திருடிச்செல்கிறாய்!!!
நீ அனைவரையும் தழுவ காத்திருக்கிறாய்
உன் காதல்வாழ்க்கையில் என்பெயரும் உண்டு!!!
காத்திரு, இந்த உலகத்தில் நன்மை பூந்தோட்டங்கள் ஆயிரம் அமைக்க விரும்புகிறேன்!!!
நான் உன்னை தழுவும்போது மலர்வளையங்கள் குவியவேண்டுமென்பதர்காக!!! காத்திரு!!!

06-12-2016



Comments