top of page

எதற்கு இந்த மதம்.

  • Writer: மழைக்காதலன்
    மழைக்காதலன்
  • Nov 30, 2023
  • 1 min read


இல்லாமையில் ஓரணு வெடித்து ஆயிரம் கோடி

ஆண்டுகள் உயிர் போற்றும்

அண்டத்தில் ஒரு நொடி

வாழும் அர்ப்பண் நீ … அரை நொடியில் தேனீயின் சிறகடித்தல் கூட

காண்பதரிது… அழகை அனுபவிக்க மறந்து அழுக்கை போற்றுகிறாய்… உடையில் உணவில்

காதலில் காமத்தில்

இல்லாத இறைவனின்

மாறாத மதத்தின்

பாசக்கயிற்றில் பற்றி

அண்டை மனிதனை

வசை பாடுகிறாய்.


ஒழுக்கம் ஓதியது

மதமென்று நம்பி

உன் நம்பிக்கைக்கு

ஒப்பாரி பாடுகிறாய்.


என்மதம் என்ற போதையில்

அடுத்தவனை வெறுக்கிறாய்

உலகில் உன் மதம்

சிறுபாதி என்பதை

மறக்கிறாய் .


வாழும் நொடியில்

வாழ்க்கையை கொஞ்சம்

ரசித்துதான் பார்ப்போமே.

அவன் இல்லறையில் நடப்பது

உன் இறை இல் சாராது

உன் சொல்லில் அன்பை சேர்

உன் கல்லறையில்

“நம்மில் வாழ்கிறான்”

என்று அண்டை

கண்ணீர் வடிக்கும்.


Comments


bottom of page