top of page

எல்லாம் மாயையோ!

  • Writer: மழைக்காதலன்
    மழைக்காதலன்
  • May 7, 2023
  • 1 min read

ree

சில்லென்ற காற்று

காற்றினூடே அறையும் சிறுதுளிகள்

காலை காஃபி உதட்டை வெதுப்பாக்க,

நக்ன மழையின் நாட்டியம் காணும் கண்கள்!


தாண்டவத்தின் ஆரவாரத்தினூடே

இல்லாத முடிவிலியை வெறிக்க.

கோபம் கொண்ட காதலிபோல

கவனம் கவர காதோரம் ஆர்ப்பரிக்கும் மழை!


சாரலில் தோள்சாய்ந்து கோர்த்தவிரல்களையும்

மழிதுளி சிதறுதலொத்த அவள் சிரிப்பையும்

மழலைகளாய் மழைப்பைத்தியங்களாய்

நினைவுகளை கிளறியது பாழ்பட்ட நெஞ்சம்!


மழைக்காதலனுக்கு மழையும் வலியானது..

அவளைவிலகி மைல்கள் கடந்து நேடிய

வேலையும் கூலியும் ஆடை ஆரவாரம்கொண்டு

பூசிய புன்னகையும், திறமைகளின் பெருமையும்

எல்லாம் மாயையோ, பதறியது நெஞ்சம்!


கடைசித்துளி காஃபியும் காலியாக

கண்ணீரும் மழைத்துளியோடொன்றாய் வழிய

அவளின் அழைப்பின் மொபைல் சிணுங்கலில்

அவன் மீண்டும் மழைக்காதலனானான்!

ree



06-05-2021

 
 
 

Comments


bottom of page