இளம் நாணலாய் அவள்
- மழைக்காதலன்

- May 5, 2023
- 1 min read

மதி தெளித்த பின்னிரவின்
மதிமயங்கும் வெளிச்சத்தில்... காதல்
ஆழியென புரளும் அன்னத்தூவல் மஞ்சத்தில்
இலவின் பஞ்சினதும் மென் கன்னங்கள்
என்னினதாய் உரச... மலர்பந்து
தோற்கும் மாரிரண்டும் நெஞ்சோடு சேர..
பாரித்தேரின் படர்ந்த முல்லைக்கொடியாய்
கட்டியணைத்த கரங்கள் இறுகி படர...
இளம் நாணலாய் அவள் சிறுத்த இடைநெகிழ
ஆசையில் கால்கள் சர்ப்பமாய் புணர,
விழிகள் மூடிய இமையினில் சொருக
புல்வெளி பனித்துளியாய் வியர்ப்பும் தெறிக்க
காமத்தின் கைவளையில் கடந்தது இரவு...

22-12-2016



Comments