காமம்
- மழைக்காதலன்

- May 8, 2023
- 1 min read

ஒற்றைத் தருணத்தில்
உயிரிரண்டு கலந்து
மேனி இரண்டில்லை என்றாகி
சுழலும் உலகம் தொடர்பிலனதாகி
காதலில் கட்டிழந்து
இறுகும் அணைப்பினிலும்
தெறிக்கும் வியர்ப்பிலும்
மெய் இன்பத்தின் பிரவாகத்தை
புணர்ந்திட வேண்டும் காமத்தை...
காட்டினில் மிஞ்சிய பிரேததில்
தசைதேடும் வல்லூரினைப் போல்
ஊனின் ஈனஇச்சையாய்
காண்பதேனோ??




Comments