top of page

கொண்டது காதல்

  • Writer: மழைக்காதலன்
    மழைக்காதலன்
  • May 12, 2023
  • 1 min read

ree

ஆழியில் குளித்த அவள்

ஆடை, மின்னும் அங்கம் சேர்த்து

அழகென்ற சொல்லுக்கொர்

அர்த்தமொன்று புதிதாய்

சேர்த்ததுவே…

அவள் காதல் பாதமும்

அங்கம் தழுவிய நீர்த்துளியும்

அலை ஓய்ந்த கரைமணலை

பொன்னாய் மாற்றினதே…

அவள் கொண்டது அழகென்பார்

அன்பாய் இருக்குமென

ஐயம் கொண்டார் சிலர்...

நான் கண்டதென்னென்று நானறியேன் ஆனால்

கொண்டது காதலென்று

மனம் களிக்கிறது....

ree

08-05-2023

 
 
 

Comments


bottom of page