நீ இல்லை என்ற தனிமை
- மழைக்காதலன்
- May 16, 2023
- 1 min read

பகல் முழுதும் படர்ந்த பகலவன்
மாலையில் மென்மையாய் மாற..
முற்றத்தில் முத்தமிட்டு கொஞ்சும்
காதல் பறவைகளின் கொஞ்சலினூடே
நேற்று மலர்ந்த மலரின் தேன்
திருடும் சிட்டின் இரைச்சலில்
ஆற்றிடை கலந்த மழைத்துளியாய்
நீ இல்லை என்ற தனிமை
அலையாடுவதேனோ!

09-05-2023
Comments