ஒருமுறையேனும்...
- மழைக்காதலன்

- May 11, 2023
- 1 min read

விளையாட்டாய்
பள்ளியில்மரநிழலில்
கதை பேசும்போதும்....
வகுப்பறையில்
மெய்மறந்துநின்முகம்
நோக்கியிருந்தபோதும்...
குடைக்கீழ்
மழைத்துளி வருடிய
உன் இதழ்ரசிக்கும்போதும்..
விழைந்திருக்கிறேன்
ஒருமுறையேனும்
சொல்லிட வேண்டுமென்று...
கல்லூரிக்காலங்களில்
கைகோர்த்து நாம்
நடக்கும்போதும்...
நூலகபுத்தகத்தின்
பக்கங்களில்புன்னகையை
மறைக்கும்போதும்...
விடுமுறை நாட்கள்
நின் அலைபேசிஅழைப்பில்
விடியும்போதும்...
விழைந்திருக்கிறேன்
ஒருமுறையேனும்
சொல்லிட வேண்டுமென்று...
முதல் வேலை
என் முதல்வெற்றியை
பகிரும்போதும்...
காஃபே டேயில்
கதை பேசி காலம்
கழித்தபோதும்...
விழைந்திருக்கிறேன்
ஒருமுறையேனும்
சொல்லிட வேண்டுமென்று...
என் காதலை...
விழைகிறேன் நான்
நீ ஒருமுறையேனும்
செவி மடுப்பாய் என்று...



Comments