தொலைதூரக் காதல்
- மழைக்காதலன்

- May 2, 2023
- 1 min read

வான் இடித்து
மேகம் பிளந்து
மண் மணம் பூசி
மரங்களை ஆட்டுவித்து
அதன் இலைகளில் வடிந்து
செம்புபூசி ஓடும் மழை...
எனக்கு ஒரு காதல் கதை
ஒரு காதலின் ஓர்மை
காதலியின் தீண்டல்
கை கோர்க்க ஏக்கம்
கால் பிணைய தாகம்
முத்தத்தின் சீண்டல்
மோகத்தின் சாரல்
விழுகின்ற துளிகள்
ஆயிரம் விழைகள் தூண்டும்
வேனல் வெக்கை
தாகம் தீர்த்து
காதல் தாகம் தூண்டும்
மழையின் காதலன்
தேடிய தாகத்தின்
தீண்டிய காதலை
யாட்சினியுடன் தீர்க்க
இன்னுமோர் மழை சூடி
காலத் தொலைவினை
குறைத்து வருகிறேன்

02-05-2023



Comments