top of page

முத்தத்தில் காமமில்லை

  • Writer: மழைக்காதலன்
    மழைக்காதலன்
  • May 3, 2023
  • 1 min read


மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு

மட்டும்தான் தெரியும்

முத்தம் காமத்தில் சேர்ந்தது

இல்லை என்று.



"மட்டும் தான்"? அபத்தம்.


முத்தத்தை காமம் என்ற

மூன்றெழுத்தில் அடக்க வேண்டாமே


முத்தம்.

அன்பிற்கு அன்பு, பாசம், நேசம்,

காதல், நட்பு, காமம் பல நிலைகள்,

முத்தத்திற்கு வேறு பெயர்கள்

இல்லாதது யார் குத்தம்?


நாள் கடந்து காண

அவள் மடியில் சாய்ந்து

கதை பேசி தூங்க

அம்மா தந்த பாச

முத்தத்தில் காமமில்லை


உயிர் வலித்து

கண்ணீரில் எனை

மரித்தபோது, தோள் சாய்த்து

அக்கா தந்த ஆறுதல்

முத்தத்தில் காமமில்லை


வாழ்வின் வெற்றிகளில்

தோளோடு நின்று

தோல்விகளில் அகலாது

பகிரும் தோழியின் மகிழ்ச்சி

முத்தத்தில் காமமில்லை

வெற்றியில் திளைத்த நண்பனின்

முத்தத்தில் காமமில்லை


என் காமம் பகிர்ந்த

காதலிகூட விளையாட்டாய்

அரவணைப்பாய் சிந்தும் செல்ல

முத்தத்தில் காமமில்லை


முத்தத்தை காமமென்று

ஒடுக்க வேண்டாம்.

அன்பின் ஆராதனையின்

பாசத்தின் பெருமிதத்தின்

வெளிப்பாடும் முத்தமாகும்


எழுத்தின் ஆழத்தில்

ஆராதிக்கும் மனது கண்ட

வரிகளின் முரண்பாட்டின்

அற்ப மனதின் எண்ணங்களை

ஆமொதிக்கும் வார்த்தை கண்ட

குழப்பத்தின் கோபத்தின்

புச்சத்தின் வெளிப்பாடும்

இக்கவிதையாகும்…






03-05-2023

Comments


bottom of page